கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் காணப்படும் அதிக விமானப் பயணிகளினால் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு காணப்படவுள்ளது.
இதன்படி, 06 மாத காலப்பகுதிக்குள் தற்காலிகமாக முனைய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறையை நிலையான அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்வதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, குறித்த துறையில் ஆராய்ச்சி செயன்முறைக்கு எவ்வாறு பங்களிப்பது என்பது தொடர்பில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை, உலகின் பல நாடுகள் ஏற்கனவே விமானப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்கும், இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்கும் ஆராய்ச்சி செயல்முறையைப் பயன்படுத்துகின்றன.
இந்நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்வியாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள், இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்தும் வகையில் புதிய சொற்பொழிவு, மேடை மற்றும் மாநாட்டை உருவாக்குவார்கள் எனவும் டிசம்பரில், இவ்வாறான மாநாட்டின் மூலம் தங்கள் முடிவுகளை வெளியிடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
Discussion about this post