அமெரிக்காவின் தென் கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 5.1 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளது.
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஓஜாய் நகருக்கு தென்கிழக்கே நான்கு மைல் தொலைவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது பல பிரதேசங்களில் உணரப்பட்டுள்ளதுடன் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post