கிராம்பு மற்றும் பிரியாணி இலை இரண்டையும் சேர்த்து தேநீர் தயாரித்து பருகினால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
பிரியாணி இலையும், கிராம்பும் சமையலறையில் மிக முக்கியமான மசாலா பொருட்கள்.
இவை இரண்டுமே ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
அதிலும் குறிப்பாக கிராம்பு ஆயுர்வேத மருத்துவத்தில் பெரும்பாலான கஷாயங்களில் சேர்க்கப்படும் ஒரு பொருளாக இருக்கிறது.
இன்று நாம் எப்படி சுவையான கிராம்பு மற்றும் பிரியாணி இலை கலந்த சுவையான தேநீர் தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
கிராம்பு – 10
பிரியாணி இலை – 3
செய்முறை
முதலில் கிராம்பை நன்றாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதோடு பிரிஞ்சி இலைகளை சேர்த்து பொடியாக்கிக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் 250 மில்லி தண்ணீரைக் கொதிக்க விட்டு அதில் அரை தேக்கரண்டி பொடியைச் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
பின்பு வடிகட்டி இந்த தேநீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
சுவைக்கு தேவைப்பட்டால் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
அதிக உடல் பருமன் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு காலை, இரவு என இரண்டு முறை குடிக்கலாம்.
அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்வது ஆபத்தினை ஏற்படுத்தும். நாம் உண்ணும் உணவுகள் சரியாக ஜீரணித்தால் மட்டுமே முறையாக கழிவுகள் வெளியேற்றப்பட்டு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
ஜீரண ஆற்றல் மேம்படும்போது மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்ந்து உடலின் மெட்டபாலிசமும் அதிகரிக்கும்.
இது உடல் எடையைக் குறைப்பதற்கு அடிப்படையான ஒன்று. பிரியாணி இலை கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலின் இள்சுலின் சுரப்பைத் தூண்டும் தன்மை கொண்டது.
இதனால் உடலின் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான இரத்த சர்க்கரை அளவு குறையச் செய்யும். கிராம்பு மற்றும் பிரியாணி இலை ஆகிய இரண்டும் சேர்த்து செய்த தேநீரை குடிப்பதன் மூலம் இன்னொரு முக்கியமான நன்மை இருக்கிறது.
இந்த கிராம்பு – பிரிஞ்சி இலை டீ குடிபபதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சினை தீரும். மலச்சிக்கல் பிரச்சினை உடல் எடை அதிகரிப்புக்கான மிக முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. அதை சரிசெய்தாலே எடை இழப்பு வேகமாக நடக்கும்.
Discussion about this post