இலங்கையின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த எனது யோசனையை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனை அடைவதற்கு திறந்த மனதுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி, நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற நாடளுமன்ற அமர்வில் ஆற்றிய விசேட உரையில் அவர்மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அனைத்து கட்சிகளின் ஆதரவு
மேலும் கூறுகையில்,13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த எனது யோசனையை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் எனது கட்சிக்கு மூன்று உறுப்பினர்களே உள்ளனர். ஆகவே 13 ஆவது திருத்த்தை முன்னோக்கிகொண்டு செல்வதனால் அதற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவும் அவசியம்.
அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் எதிர்ப்பது என்ற பாரம்பரிய நடைமுறையில் இருந்து எதிர்க்கட்சிகள் விலகிச் செல்ல வேண்டும் என்றும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
Discussion about this post