கனடாவில் ஒரு வகை கண் சொட்டு மருந்து பொதுமக்களின் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி10 மில்லிலீற்றர் அளவுடைய க்ரோமிலின் கண் சொட்டு மருந்துகள் சந்தையிலிருந்து விலக்கி கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை கண் சொட்டு மருந்தினை பயன்படுத்தினால் pseudomonas aeruginosa என்னும் பக்ரீரியாவினால் பாதிப்பு ஏற்படும் சாத்தியங்கள் உண்டு எனவும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இந்த கண் சொட்டு மருந்தினால் பாதிக்கப்படுவது அதிகம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் இந்த கண் சொட்டு மருந்தினால் பாரதூரமான நோய் நிலைமைகள் எதுவும் ஏற்படக்கூடிய அபாயம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
Discussion about this post