சீனா தவிர்ந்த வேறும் நாடுகளும் கனேடிய விவகாரங்களில் தலையீடு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவின் என்டிபி கட்சி தலைவர் ஜக்மீட் சிங் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் கனேடிய பொது தேர்தல்களில் சீனா தலையீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. கடந்த இரண்டு பொது தேர்தலின் போதும் சீனா தலையீடு செய்தது என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் சீனா தவிர்ந்த வேறும் நாடுகளும் பல்வேறு வழிகளில் கனேடிய விவசாயங்களில் தலையீடு செய்வதாக ஜக்மீட் சிங் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறிப்பாக ரஷ்யா, இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் கனேடிய உள் விவகாரங்களில் தலையீடு செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எனவே வெளிநாடுகளின் தலையீடு தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post