சைபீரிய விஞ்ஞானிகள் 46,000 ஆண்டுகளுக்கு முன் உயிர் வாழ்ந்த நுண்ணிய நூற்புழுக்களை உயிர்பித்து சாதனை படைத்துள்ளனர்.
இதேபோன்று கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னும் சைபீரிய விஞ்ஞானிகள் வட்டப்புழுக்களை கண்டுபிடித்து அதை உயிர்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில், அதே இனத்தை சேர்ந்த 46,000 ஆண்டுகள் பழைமையான இதுவரை கண்டுபிடிக்கப்படாத நுண்ணுயிர் உயிரினத்தை முதன்முதலாக சைபீரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
விஞ்ஞானி கண்டுபிடித்த புழுக்கள் வடகிழக்கு ஆர்க்டிக்கில் உள்ள வண்டல் படிவுகளில் உள்ள புதைபடிவ பர்ரோவில் இருந்து எடுக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
45,839 மற்றும் 47,769 ஆண்டுகளுக்கு முன்பு ப்ளீஸ்டோசீன் சகாப்தத்தின் பிற்பகுதியில் இருந்து இந்த புழுக்கள் உறைந்திருந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆய்வு தொடர்பாக மாக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஒஃப் மாலிகுலர் செல் பயாலஜி அண்ட் ஜெனெடிக்ஸ் நிறுவனத்தின் ஆய்வு இணை ஆசிரியர் டெய்முராஸ் குர்சாலியா சயின்டிஃபிக் இது தொடர்பில் கூறுகையில்,
“ உண்மையில் இது ஒரு வியக்கதக்க விடயமே. ரேடியோகார்பன் டேட்டிங் முற்றிலும் துல்லியமானது, மேலும் அவை உண்மையில் 46,000 ஆண்டுகள் உயிர் பிழைத்துள்ளன என்பதை என்னும் போது நாங்கள் இப்போது புதுமையாக இருக்கின்றது.
தற்போது அவை தனது வாழ்க்கை நிறுத்தி மட்டுமே வைத்துள்ளது. மாறாக உயிர் வாழ்ந்து இறந்து போகவில்லை. உறைந்த நிலையில் இருந்த அந்த நுண்ணயிரை நாம் தற்போது உயிர்பித்துள்ளளோம்.
இதனையொட்டி நமக்கு ஏதேனும் நன்மைகள் இருக்கின்றனவா என்பது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்டுள்ளோம். வெகு விரைவில் அது தொடர்பிலான விடயங்களை உங்களிடம் நாம் பகிர்ந்து கொள்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post