அமெரிக்கா – டெக்சாஸ் மாநிலத்தில் , 35 வயதான மைக்கேல் கோல்ஹோஃப் என்பவருக்கு ஆபத்தான வகையை சேர்ந்த ‘உண்ணி’ கடித்ததால் இரண்டு கைகள் மற்றும் கால்களின் சில பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
உண்ணி கடித்ததால் மைக்கேலுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்பட்டன. அறிகுறிகள் தோன்றிய ஒரு வாரத்திற்குப் பிறகு, மைக்கேலின் நிலை வேகமாக மோசமடைந்தது.
படுக்கையில் இருந்து எழுந்திருக்க கூட முடியவில்லை. இதையடுத்து அவர், சான் அன்டோனியோ பகுதியில் உள்ள ஒரு வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்கை வழங்கப்பட்டுள்ளது.
சிகிச்சையில் இருக்கும்போதே அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கியுள்ளது.
அதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அடுத்த 24 மணி நேரத்தில் நோய்க்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் வைத்தியர்கள் ஈடுபட்டனர். அதற்குள் மைக்கேலின் உடலில் பல இடங்களில் இரத்த ஓட்டம் நின்றது. இதனால் அவருக்கு கேங்க்ரீன் எனப்படும் திசுக்கள் இறக்கும் நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக மைக்கேலின் கால் விரல்கள், அவரது கால்களில் ஒரு அங்குலம் மற்றும் கைகளில் முழங்கை வரை துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தொற்று பாதித்த உண்ணிகளில் உள்ள டைபஸ் எனும் பாக்டீரியா மூலமாக இந்த கொடிய நோய் பரவுவது வைத்தியர்களினால் கண்டறியப்பட்டுள்ளது.
Discussion about this post