தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் புதல்வர் கெரி ஆனந்தசங்கரி, கனடாவின் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர் ஒருவர் கனடிய அமைச்சரவை அமைச்சராக முதல் தடவையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளும் லிபர கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவராக ஆனந்தசங்கரி கடமையாற்றி வருகின்றார். கனடாவின் அரசு பழங்குடியின உறவுகளுக்கான அமைச்சராக கெரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்காப்ரோ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றி வரும் கெரி ஆனந்த சங்கரி, கடந்த 2015ம் ஆண்டு முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உரிமைகள் சட்டத்தரணியான ஆனந்தசங்கரி, சமூக ஆர்வலராகவும் தமிழர் விவகாரங்கள் மற்றும் மனித உரிமை விவகாரங்களுக்காக குரல் கொடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post