கனடா- மிஸ்ஸிசாகாவின் பள்ளிவாசல் ஒன்றில் வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய நபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நபருக்கு எதிராக மூன்று தீவிரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. முஹம்மத் மாயிஸ் ஒமர் என்ற நபருக்கு ஓன்றாரியோ உச்சநீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது.
தாக்குதல் சம்பவம் ஒன்றுக்கு வழமையாக வழங்கப்படும் தண்டனையை விடவும் அதிக அளவிலான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு பயங்கரவாத குற்றச்சாட்டுகளே காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒமர் என்ற நபர் குரோத உணர்வில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. இதன் அடிப்படையில் குறித்த நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டில் ஈடுபட வந்திருந்தவர்கள் மீது கரடிகளை விரட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஸ்பிரே வகை ஒன்றையும், கத்தியையும் கொண்டும் குறித்த நபர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திட்டமிட்ட அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post