பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தின் செலவுகள் தொடர்பில் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்து கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
அரசாங்கம் சரியான விடையங்களுக்கு செலவிடுகின்றதா என்பது குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 23 வீதமான மக்கள் மட்டுமே அரசாங்கத்திற்கு சார்பாக கருத்து வெளியிட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் செலவுகள் தொடர்பில் திருப்தி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொண்ட்ரியால் பொருளியல் நிறுவகத்தினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டு இருந்தது, முக்கியமான விடயங்களுக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம் பணத்தை செலவிட தவறியுள்ளதாக 64% மக்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் மிதமிஞ்சிய அளவில் செலவு செய்வதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தாங்கள் கூடுதல் அளவில் வரி செலுத்துவதாக சுமார் 67 வீதமான கருத்து வெளியிட்டுள்ளனர்.
கனடாவில் அளவீடு செய்யப்படும் வரி தொகையானது மிக அதிகமானது என கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
Discussion about this post