வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இலங்கை சனத்தொகை நான்கு மில்லியனாக அதிகரித்துள்ளதாக அண்மைய ஆய்வு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தலைமையில் LIRNEasia நிறுவனத்தால் எனும் இந்த ஆராய்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2023 கணக்கெடுப்பின்படி, வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பவர்களில் 81 வீதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.
2019 முதல், கிராமப்புற வறுமை 15 வீதத்தில் இருந்து 32 வீதமாக இரட்டிப்பாகியுள்ளது, அதே நேரத்தில் நகர்ப்புற வறுமை ஆறு வீதத்தில் இருந்து 18 வீதமாக மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
பெருந்தோட்ட சமூகத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் வறுமையில் வாடுவதை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
தற்போதுள்ள சமூக உதவித் திட்டங்கள் சமூகத்தில் உள்ள ஏழை மக்களைச் சென்றடையவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர்களின் கணக்கெடுப்பு அறிக்கை, ஏழை 10 குடும்பங்களில் 31 வீதம் மட்டுமே செழிப்பாக இருப்பதாகவும், பணக்கார 10 குடும்பங்களில் நான்கு வீதம் மட்டுமே செழிப்புடன் இருப்பதாகவும் வெளிப்படுத்துகிறது.
இது குறித்து LIRNEasia இன் கயானி ஹுருல்லே கருத்து வெளியிடுகையில்,
“இவ்வளவு குறுகிய காலத்தில் மேலும் நான்கு மில்லியன் இலங்கையர்கள் வறுமையில் வீழ்ந்துள்ளமை வருத்தமளிக்கிறது. குடும்பங்கள் ஒரு குழந்தையின் கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
நாங்கள் சந்தித்த பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு சரிவிகித உணவை வழங்க முடியாதுள்ளதாக சுட்டிக்காட்டினர்.
இந்த சவாலான காலங்களில் சமூக பாதுகாப்பு வலைகளில் போதுமான அளவு செலவு செய்வதன் மூலம் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாக்க முடியும்.
சமூக பாதுகாப்பு வலைகளுக்கு போதுமான ஏற்பாடுகளை ஒதுக்குவது மட்டுமல்லாமல், ஒதுக்கப்பட்ட நிதியை திறமையாகப் பயன்படுத்துவதும் அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பிரதிநிதிகளான 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்களின் மாதிரியைக் கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்று ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
அக்டோபர் 2022 மற்றும் மார்ச் 2023 க்கு இடையில் 400 கிராம அலுவலர் களங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
கணக்கெடுப்புக் குழுவின் கூற்றுப்படி, 13 மாவட்டங்களில் 400 க்கும் மேற்பட்ட நபர்களுடன் முக்கிய தகவலறிந்த நேர்காணல்கள், குழு விவாதங்கள், தனிப்பட்ட நேர்காணல்கள் மற்றும் அவதானிப்புகள் வடிவில் தரமான ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
கனடாவின் ஒட்டாவாவில் உள்ள சர்வதேச வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தின் (IDRC) மானியத்தின் உதவியுடன் இந்த ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post