சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை 13 ஆவது திருத்த சட்டமும் தற்போதைக்கு சரிப்பட்டு வராது என தெரிவித்துள்ளார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.
அப்படியென்றால் தமிழருக்கான தீர்வுதான் என்ன?
தம்மிடையே என்னதான் குத்துப்பட்டாலும் சிங்கள தேசம் தமிழருக்கான உரிமையை வழங்காதிருக்கும் விடயத்தில் ஒற்றுமையாகவே உள்ளது.
தமிழர் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் தான் காலத்திற்குகாலம் அவர்களிடம் ஏமாந்து போகின்றனர். இல்லையென்றால் இறுதி யுத்தத்தில் தலைமைத் தளபதியாக செயற்பட்ட சரத் பொன்சேகா பின்னர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது அவரை ஆதரிக்கவேண்டுமென கூறியதும் பின்னர் மைத்திரி -ரணில் தலைமையிலான அரசுக்கு ஐந்து வருடம் முட்டு கொடுத்து தீபாவளிக்கு தீர்வு,பொங்கலுக்கு தீர்வென்ற கதையும் கூறி தமிழ் மக்களை ஏமாற்றியது தான் மிச்சம் .
தமிழ் தலைமைகள் தீர்வை பெற்றுக் கொள்வதில் சிங்கள தேசத்துடன் புரிந்துணர்விற்கு செல்வதற்கு முன்னர் தங்களிடையே புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்த வேண்டுமென கூறுகிறார் இவர்களின் செயற்பாட்டை பார்த்த அரசியல் நண்பர் ஒருவர்.
சமஷ்டி என்கிறது ஒருகட்சி, ஒரு நாடு இருதேசம் என்கிறது மற்றொரு கட்சி, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்கிறது இன்னுமொரு கட்சி. இவ்வாறு ஆளுக்கொரு கோட்பாடுகளுடன் இவர்கள் இருந்தால் தமிழ் பிரதிநிதிகள் என்று சொல்லி பேச்சை தொடர்வது யார்?
காலாதிகாலமாக சிங்கள தேசம் தமிழர்களை ஏமாற்றவில்லை. தமிழ் பிரதிநிதிகளும்தான்
Discussion about this post