ஒரு கிலோ கோழி இறைச்சியின் மொத்த விலை 200 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1450 ரூபாவாக குறைந்துள்ளதாக அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பெய்த மழையினால் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக மெனிங் சந்தை சங்கத்தின் தலைவர் எச்.எம்.உபாசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பழங்களின் விலையும் அதிகளவில் காணப்படுவதாக மெனிங் சந்தை சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post