கனடாவில் நதியில் விழுந்து காணாமற்போன யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள செய்தி அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Scarboroughவில் அவசர மருத்துவ உதவியாளராக பணியாற்றிவந்த இலங்கையரான அர்ஜனன் சிவசத்தியராஜா பணி நிமித்தமாக படகில் சென்ற நிலையில் கடந்த 3ஆம் திகதி மாயமாகியுள்ளார்.
கடந்த 5ஆம் திகதி, மாலை 5.00 மணியளவில், Kashechewan நதியில் அர்ஜனனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் நதியில் தவறிவிழுந்திருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
2017ஆம் ஆண்டு அர்ஜனனின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், தன் தந்தைக்கு தன்னால் எந்த உதவியும் செய்யமுடியவில்லையே என வருந்திய அர்ஜனன், அந்த சம்பவத்தின் தாக்கத்தால் அவசர மருத்துவ உதவியாளராக பணி செய்ய முடிவு செய்துள்ளார்.
அவர் புதிதாக பணியில் இணைந்து சில வாரங்களே ஆன நிலையில் தனக்குப் பிடித்த வேலையின்போதே மரணமடைந்துள்ளார். இந்த தகவலை அர்ஜனனின் சகோதரரான காஞ்சனன் (Kajanan Sivasathiyarajah) தெரிவித்துள்ளார்.
அர்ஜனன் யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன
Discussion about this post