கனடாவின் ரொரன்டோ வைத்தியசாலை நோயாளிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
சுமார் 100 நோயாளிகளிடம் பரிசோதனை ஒன்றுக்காக தல 120 டொலர்களை வைத்தியசாலை நிர்வாகம் அளவீடு
செய்துள்ளது.
தவறுதலாக இவ்வாறு கட்டணம் அளவீடு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வந்ததன் காரணமாக வைத்தியசாலை
நிர்வாகம் நோயாளிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
பரிசோதனைகளுக்காக கட்டணம் அளவீடு செய்யப்பட மாட்டாது என பல்கலைக்கழக சுகாதார வலையமைப்பின்
தொடர்பாடல் துறை பிரதி தலைவர் கைலா குமார் தெரிவித்துள்ளார்.
மொழிபெயர்ப்பு மற்றும் தொடர்பாடல் பிரச்சினை காரணமாக இவ்வாறு தவறுதலாக கட்டணம் அளவீடு செய்யப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியசாலை நிர்வாகம் கூடிய விரைவில் இது குறித்து விசாரணை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக
கட்டணம் செலுத்திய நோயாளிகளுக்கு மீளவும் அந்தப் பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post