பார்கின்சன் எனும் நடுக்குவாத நோய் வருவதற்கான அறிகுறிகளை அதிகபட்சமாக 7 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்மார்ட் வாட்ச் மூலம் கண்டறிய முடியும் என்பதான ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டிமென்ஷியா ஆராய்ச்சி நிறுவனம், 103,712 ஸ்மார்ட்வாட்ச் அணிந்தவர்களின் தரவுகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பகுப்பாய்வு செய்துள்ளது.
2013 மற்றும் 2016 காலகட்டத்திற்கு இடையில், அவர்களின் ஒரு வார இயக்க வேகத்தைக் கண்காணிப்பதன் மூலம், பர்கின்சனின் வருவதற்கான அறிகுறிகளை முன்கூட்டியே கணிக்க முடிந்தது.
இந்தத் தரவுகள் நோயின் அறிகுறிகளைக் கணிக்க உதவும் என நம்பப்படுகிறது
Discussion about this post