எதிர்வரும் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் யாழ்ப்பாணம் – சென்னை இடையில் தினமும் விமானசேவை முன்னெடுக்கப்படும் என இந்திய மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற இந்திய பயண முகவர் சங்கத்தின் 67ஆவது மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் வெளியிட்டிருந்த செய்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
சென்னைக்கும் இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை வாரத்திற்கு நான்கு முறையிலிருந்து தினசரி சேவைகளாக ஜூலை 16 முதல் அதிகரிக்கப்படவுள்ளன.
இந்த தினசரி விமான சேவைகளை முன்னெடுப்பதானது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை மேலும் அதிகரிக்கும் .
வர்த்தகம், உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்களால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையுடனான எமது கூட்டாண்மையானது, இத்துறையில் குறுகிய கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பல சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும், உலகளாவிய விமான போக்குவரத்து சுற்றுச்சூழலில் அதிகாரம் மற்றும் செல்வாக்கின் முக்கிய அணுகலாக மாறுவதற்கும் ஒரு அரிய வாய்ப்பை வழங்குவதாக நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது இந்தியாவிலிருந்து கொழும்புக்கு 16 விமானங்கள் இயக்கப்படுகின்றதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post