கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் Bastian மாவத்தையில் அமைந்துள்ள மிதக்கும் சந்தையானது 92 வர்த்தக கடைகளுடன் பெய்ரா ஏரியில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த மிதக்கும் சந்தையானது உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் உள்ளூர் கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் சுற்றுலாத் தலமாக செயல்படுகிறது.
உரிமம் இல்லாத தெருவோர வியாபாரிகளை நடைபாதையில் இருந்து இடமாற்றம் செய்வதும், சுற்றுலாப் பயணிகளை கவர்வதும் இந்த மிதக்கும் சந்தை அமைக்கப்பட்டதன் நோக்கமாக உள்ளது.
எனினும் பாவனைக்காக விடப்பட்ட ஆரம்பகால கட்டத்தில் சிறப்பாகவும், வினைத்திறனுடன் செயற்பட்ட இப்பகுதியானது தற்போது சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய மற்றும் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய இடமா என கேட்டால் அது சந்தேகமே.
இந்த மிதக்கும் சந்தைகளில் உள்ள கடைகளுக்கு அதிக வாடகை அறவீடு மற்றும் நுகர்வோரின் வருகை வீழ்ச்சி என்பன நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்காரணமாக பல கடைகள் பூட்டப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாகவும், இதனால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பலர் ஏமாற்றமடைவதாகவும் அங்கிருக்கும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
Discussion about this post