கனடாவில் அதிக எண்ணிக்கையிலான சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Square One Insurance Services வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விபரம் தெரிய வந்துள்ளது.
கனடாவின் பிரதான நகரங்களில் அதிக எண்ணிக்கையிலான சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விக்டோரியா, வாங்குவர், கல்கரி, ரெஜினா, வினிபெக், டொரன்டோ மற்றும் மொன்றியல் ஆகிய நகரங்களில் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் 429 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2022 ஆம் ஆண்டில் சைக்கிள் திருட்டு சம்பவங்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் விக்டோரியா வான்குவர், கல்கரி, வின்னிபிக் மற்றும் டொரன்டோ ஆகிய நகரங்களில் சுமார் 75 ஆயிரம் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளன.
அதிக எண்ணிக்கையிலான சைக்கிள்கள் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் வாங்குவாரில் வீதிகளில் அல்லது பூங்காக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்களே அதிக அளவில் களவாடப்பட்டுள்ளன. சைக்கிள் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த அதி உயர்தர லொக்களை பயன்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post