கனடாவில் கூகுள் தேடுதளத்தை பயன்படுத்தும் பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் கனேடிய பயனர்களுக்கு கூகுள் தேடுதளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கனேடிய ஊடகங்களினால் வெளியிடப்படும் செய்திகள் பார்வையிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
லிபரல் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத்திற்கு பதிலடியாக இந்த அறிவிப்பினை google நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக லிபரல் அரசாங்கம் Bill C-18 என்னும் ஓர் சட்டத்தை அமுல்படுத்தி இருந்தது. இந்த சட்டத்தின் ஊடாக கூகுள் உள்ளிட்ட பிரதான தொழில்நுட்ப நிறுவனங்கள் கனடிய ஊடகங்களுக்கு, தங்களினால் பிரசுரிக்கப்படும் தகவல்களுக்காக கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கட்டணம் செலுத்தும் நடைமுறைக்கு கூகுள், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் எதிர்ப்பை வெளியிட்டு இருந்தன.
இவ்வாறான ஒரு பின்னணியில் கனடிய ஊடகங்களினால் வெளியிடப்படும் செய்திகளை கூகுள் தேடுதளத்தில் காண்பிக்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, google நிறுவனம் பொறுப்பற்ற ஓர் தீர்மானத்தை எடுத்துள்ளதாக கனடிய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
Discussion about this post