தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன தமது அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலைகளை அதிகரித்துள்ளன.
இதற்கமைய 20 ரூபாவாக காணப்பட்ட அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலைகள் தற்போது 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூலை 6 ஆம் திகதி முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலைகளை இரண்டு மடங்குகளால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அதிர்ஷ்ட இலாப சீட்டு ஒன்றின் விலையை 40 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கிரிஷாந்த மரம்பகே தெரிவித்திருந்தார்.
இந்த விலை அதிகரிப்புக்கு நிதி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை லொத்தர் சீட்டுகளின் விலை அதிகரிக்கப்பட்டால், ஒரு லொத்தர் சீட்டுக்கான விற்பனை முகவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 3.75 ரூபாய் தரகு பணம் 8 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
இதன்படி தரகு பணத்தை எட்டு ரூபாயாக அதிகரிக்காவிட்டால் லொத்தர் சீட்டுகளை விற்க முடியாத நிலை ஏற்படும் எனவும் லொத்தர் சீட்டுகளின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமது தொழிற்சங்கம் போராட்டம் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Discussion about this post