தேசிய கடனை மறுசீரமைப்பது சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக கொழும்பில் நேற்று ஜனாதிபதி தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றதுடன் அதனை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒழுங்கு செய்திருந்தார்.
தேசிய கடனை மறுசீரமைக்கும் போது ஊழியர் சேமலாப நிதியில் கை வைக்க போவதில்லை என அரசாங்கம் கூறினாலும் அரசாங்கம் அதில் கை வைக்கும் என்பது தெளிவானது என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தேசிய கடனை மறுசீரமைப்பது சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக கொழும்பில் நேற்று ஜனாதிபதி தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றதுடன் அதனை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒழுங்கு செய்திருந்தார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் இந்த சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன்,
தேசிய கடனை மறுசீரமைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளுக்கு விளக்குமாறு கோரி நாங்கள் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்டோரை அழைத்திருந்தோம். ஜனாதிபதி சந்திப்பில் சிறிது நேரம் கலந்துக்கொண்டு விட்டு சென்றார்.
ஊழியர் சேமலாப நிதியில் கை வைக்கக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு. அந்த நிதி பொதுமக்களின் நிதி. இதனால், அதில் கை வைக்கக்கூடாது. எனினும் கலந்துரையாடலின் போது அரசாங்கம் ஊழியர் சேமலாப நிதியில் கை வைக்க தயாராக வருவதை தெளிவாக கணக்கூடியதாக இருந்தது. எனினும் அரசாங்கத்திற்கு அதனை செய்ய நாங்கள் இடமளிக்க மாட்டோம் எனக்கூறியுள்ளார்.
Discussion about this post