தாய்லாந்து நாட்டில் நட்சத்திர மீனுடன் செல்பி எடுத்த சீன சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தாய்லாந்தில் பவள பாறைகள் மற்றும் அழிய கூடிய சூழலில் உள்ள கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் நோக்கில் புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சீனாவை சேர்ந்த சன்யாங் குவின் மற்றும் வென் ஜாங் ஆகியோர் தாய்லாந்தின் கோ ரச்சா யாய் என்ற தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
குறித்த தீவில் கடலில் மூழ்கி குளித்து மகிழ்ந்துள்ளதுடன், பவள பாறை மீது ஏறி நடந்தும் மற்றும் நட்சத்திர மீன்களை கைகளில் பிடித்தும் அவற்றுடன் புகைப்படமும் எடுத்துள்ளனர்.
அதன் பின்னர் இருவரும், தாம் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த சம்பவம் தொடர்பாக கடல்வாழ் பாதுகாப்பு அதிகாரிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, இருவரும் பொலிஸாரின் விசாரணையின் போது தாம் செய்த தவறை ஒப்புக் கொண்டுள்ளனர்.
அதையடுத்து இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் அவர்களை பொலிஸார் முன்னிலைப்படுத்திய பொழுது, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post