இயக்குனர் ராம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின் 2018ம் ஆண்டு பரியேறும் பெருமாள் என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் மாரி செல்வராஜ்.
அதன்பின் பேரன்பு, கர்ணன் என படங்கள் இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் மாமன்னன். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இப்பட புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்யை சந்தித்தது குறித்து மாரி செல்வராஜ் பேசியுள்ளார். விஜய்யை
நேரில் சந்தித்து ஒரு கதை கூறினேன், கதையை கேட்டுவிட்டு அவர் கமர்ஷியல் விஷயம் இல்லையா?.
எனக்கு இப்படியொரு கதையா என சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டு சென்றுவிட்டாராம் விஜய். இதனை ஒரு
பேட்டியில் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
Discussion about this post