கனடாவின் டொரண்டோ மாநகர சபையின் நேராக ஒலிவியா சோவ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 13 ஆண்டுகளாக மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் வலது சாரி கட்சிகளின் வசம் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
டொரன்டோ நகரம் மீள் இணைக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக பெண் ஒருவர் மேயர் பதவிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 66 வயதான சோவ் ஆரம்ப முதலே இந்த தேர்தலில் முன்னணி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் 37.2 வீத வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்த நாள் மகிழ்ச்சிகரமான நாள் என தெரிவித்துள்ள சோவ், ஒன்றிணைந்து செயல்படும்போது பல வெற்றிகளை ஈட்ட முடியும் என்பது தெளிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு ஆதரவளித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.
Discussion about this post