ஐரோப்பிய யூனியன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை ஐரோப்பாவில் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது
LGBTQ+ பயனர்கள் பாதுகாப்பில் ட்விட்டர் மிகவும் மோசமாக செயற்படுவதாக கிளாட் (GLAAD) எனும் தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை ஐரோப்பாவில் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. சமூக வலைதளங்களில் வெறுப்பு பேச்சு, தவறான தகவலை பகிருதல் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் விடயங்களை கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது.
இது தொடர்பில் ட்விட்டர் தளத்தின் CEO லிண்டா யாக்காரினோ, ட்விட்டர் ஊழியர்களுடன் ஐரோப்பிய யூனியனின் ஆணையர் தியரி பிரெட்டன் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு ட்விட்டர் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளதோடு இதில் எலான் மஸ்க், காணொளி மூலமாக இணைந்துள்ளார். ஐரோப்பிய யூனியனின் டிஜிட்டல் கொள்கையை தியரி பிரெட்டன் மேற்பார்வை செய்து வரும் நிலையில்,
பயனர் பாதுகாப்பு சார்ந்த விதிகளுக்கு இணங்க ட்விட்டர் இயங்க வேண்டும். குறிப்பாக தவறான தகவல் பரப்புதல் மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோகம் (Child Abuse) சார்ந்த விடயங்கள் கூடாது. அதை தடுப்பதற்கான தொழில்நுட்பம் ட்விட்டரில் இருக்க வேண்டும் எனவும் இந்த விதி அமலுக்கு வரும் போது அதற்கு இணங்க ட்விட்டர் தளம் சில மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது. இது குறித்து மஸ்க் மற்றும் குழுவினருடன் தெளிவாக பேசி உள்ளதாகவும் தியரி பிரெட்டன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக LGBTQ+ பயனர்கள் பாதுகாப்பில் ட்விட்டர் மிகவும் மோசமாக செயற்பட்டு வருகிறதாக என கிளாட் (GLAAD) எனும் தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. மிகவும் பிரபலமாக உள்ள தளங்களில் தான் இந்த தகவல்கள் அதிகம் பரவுவதாக இந்த புதிய டிஜிட்டல் சேவை விதி மெட்டா, டிக்டாக் என முன்னணி சமூக தளங்களில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளது.
அதனால் மெட்டா CEO மார்க் ஸூகர்பெர்க் உடன் தியரி பிரெட்டன் பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி நிச்சயம் டிஜிட்டல் சேவை சட்டம் அமலுக்கு வந்தால் அதற்கு இணங்க ட்விட்டர் செயல்படும் என மஸ்க் தெரிவித்துள்ளார்.
சுமார் 450 மில்லியன் பயனர்கள் கொண்ட ஐரோப்பிய யூனியனின் புதிய சட்ட விதிகளுக்கு ஏற்ப முன்னணி சமூக வலைதளங்கள் இயங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த விதிகளை மீறினால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஓர் ஆண்டுக்கான உலக வருவாயில் 6 வீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும். விதிகளை மீறும் நிறுவனங்கள் ஐரோப்பிய யூனியனில் இயங்கவும் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐரோப்பிய யூனியன் இந்த ஆண்டின் இறுதியில் ஏஐ (AI) தொழில்நுட்பம் சார்ந்த சட்ட விதிகளை கொண்டு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post