ரஷ்யாவில் வாக்னர் குழுவினர் புட்டின் அரசாங்கத்திற்கு எதிராக வெளிப்படையாக கலகத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்கள் மொஸ்கோவை நோக்கி செல்கின்றனர் என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன.
பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வு தகவல்களை மேற்கோள் காட்டி பிபிசி இதனை தெரிவித்துள்ளது.
வொரனஜோ பிளாஸ்ட் என்ற நகரத்திலிருந்து வாக்னர் குழுவினர் வடபகுதியை நோக்கி செல்வதாகவும், நிச்சயமாக கூலிப்படைகள் மொஸ்கோவை இலக்குவைக்கின்றன எனவும் பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த நகரம் தற்போது வாக்னர் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ரொஸ்டொவ் ஒன் டொனிற்கும் மொஸ்கோவிற்கும் இடையில் காணப்படுகின்றது ரொஸ்டொவ் ஒன் டொன் நிச்சயமாக அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என பிரிட்டன் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ரஷ்யா எதிர்கொண்ட மிகப்பெரிய சவால் இது எனவும், வெளிப்படையான மோதல் இடம்பெறலாம் எனவும் பிரிட்டன் கூறியுள்ள அதேவேளை , ரஷ்ய படையினர் சில இடங்களில் வாக்னர் குழுவை எதிர்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
அதேவேளை முதுகில் குத்திவிட்டீர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என வாக்னர் கூலிப்படைக்கு புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post