நைஜீரியாவின் வடக்கு நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது.
இத் திருமண நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலர் பங்கேற்றுள்ளனர். திருமணம் முடிந்து 300க்கும் மேற்பட்டோர் ஒரு படகில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அந்த படகில் பயணித்தவர்கள் தங்களது மோட்டர் சைக்கிளையும் எடுத்து வந்திருந்தனர். அப்போது அதிக எடை காரணமாக படகு திடிரென ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஈரப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட 103 பேர் பரிதாபமாக பலியானதோடு அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் 100 க்கு மேற்பட்டோரை மீட்டுள்ளனர்.
பலர் காணாமல் போயுள்ளனர் அவர்களை தொடர்த்தும் தேடி வருகின்றனர். திருமணத்துக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய மக்கள் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post