விஜய் சேதுபதி எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த உழைப்பால் இப்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்துள்ளார்.
சீரியல்களில் நடித்து இப்போது தமிழை தாண்டி பல மொழிகளிலும் படங்கள் நடித்துவரும் விஜய் சேதுபதி அடுத்தடுத்தும் பிஸியாக படங்கள் நடிக்கிறார்.
ஆனால் அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகும் படங்கள் சரியான வரவேற்பை பெறுவதில்லை, அவர் விரைவில் ஒரு மாஸ் ஹிட் கொடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜெஸ்ஸி என்பவரை 2003ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட விஜய் சேதுபதிக்கு சூர்யா மற்றும் ஸ்ரீஜா என மகன் மற்றும் மகள் உள்ளனர். நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தமிழில் சில படங்களில் தலைகாட்டியுள்ளார்.
தற்போது விஜய் சேதுபதி மற்றும் அவரது மகனின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது, அதற்கு ரசிகர்களிடமும் நல்ல லைக்ஸ் குவிந்து வருகிறது.
Discussion about this post