சோவியத் கால அணையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பால், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள உக்ரைன் நீர்மின் நிலைய அணை தகர்க்கப்பட்டது தொடர்பான காணொளியை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு உக்ரைன் பகுதியில் சோவியத் கால ககோவ்கா நீர்மின் நிலைய அணை காணப்படுகிறது.
உக்ரைனின் பிரதான நீர்மின் நிலையத்திற்கு நீரை வழங்கும் முக்கிய அணை இதுவாகும். இந்த அணை 2014யில் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்திற்கும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள Zaporizhzhia அணுமின் நிலையத்திற்கும் தண்ணீர் வழங்குகிறது.
தற்போது குறித்த அணையில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் அணை உடைந்து வெள்ளம் உண்டாகியுள்ளது.
Discussion about this post