கனடாவின் பல்வேறு இடங்களில் நிலவும் காட்டுத் தீ சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸ் உதவிகளை வழங்கியுள்ளது.
குறிப்பாக கியூபெக் மாகாணத்தில் நிலவி வரும் காட்டுத் தீ அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸ் 100 தீயணைப்புப் படைவீரர்களை அனுப்பி வைக்க உள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் இந்த விடயம் தொடர்பில் டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு தீயணைப்புப் படையினரை அனுப்பி வைப்பது குறித்து கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நன்றி பாராட்டியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் மிக நெருக்கமான உறவு காணப்படுவதாகவும் இந்த உறவுகள் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு வலுப்பெற்றுள்ளது எனவும் பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கியூபெக்கில் 141 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. காட்டுத் தீ காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
Discussion about this post