இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளது.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டு 229 ரூபாயாகவும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 11 ரூபாய் குறைக்கப்பட்டு 114 ஆகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், ஒரு கிலோகிராம் சிகப்பு பருப்பின் விலை 11 ரூபாய் குறைக்கப்பட்டு 314 ரூபாயாகவும் ஒரு கிலோ மாவின் விலை 15 ரூபாய் குறைக்கப்பட்டு 210 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post