மே மாதத்தின் முதல் இரு வாரங்களில் 36 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தரவுகளின்படி, இம்மாதத்தில் மட்டும் இதுவரை 36,100 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
இவ்வாறு வந்த சுற்றுலா பயணிகளில் இந்தியர்களே அதிகம் என்றும் மொத்தமாக 9 ஆயிரத்து 323 இந்தியர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவிலிருந்து 3,686 சுற்றுலாப் பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 2,523 பேரும், ஜேர்மனியில் இருந்து 2,179 பேரும் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.
இதேநேரம் அவுஸ்ரேலியாவிலிருந்து 2,075 பேரும், சீனாவில் இருந்து 1,915 சுற்றுலாப் பயணிகளும் இந்த மாதம் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இதேவேளை ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 105,498 சுற்றுலாப் பயணிகள் வந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
மேலும் இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 477,277 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
Discussion about this post