பூமியில் நிகழும் சில அதிசய இயற்கை தோற்றங்களில் ஒன்றுதான் துருவ ஒளிகள். வானில் வண்ணங்களில் நடனமாடும் இந்த அதிசய நிகழ்வு பார்ப்பவர்களின் கண்களுக்கு ஒளி விருந்தாக அமையும்.
துருவ ஒளி அல்லது ஆரோரா என்பது வட, தென்துருவ பகுதிகளில் தோன்றும் ஒரு அபூர்வ ஒளி தோற்றம். இந்த ஒளி தோற்றம் பொதுவாக ஆர்டிக், அண்டார்டிக் பகுதிகளில் மாலை நேரங்களில் எளிதாக காணமுடியும் என்கிறார்கள்.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து, ஐஸ்லாந்து நாடுகளில் விமான பயணம் மேற்கொண்ட 2 இளம்பெண்கள் தங்கள் பயணத்தின் போது வடதுருவ ஒளிகளை பார்த்ததாக சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பதிவிட்டனர்.
மேலும் ஒளி தோற்றத்தை கண்ட இன்ப அதிர்ச்சியில் அந்த 2 இளம்பெண்களும் துள்ளி குதிப்பது போன்ற வீடியோ காட்சி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Discussion about this post