உக்ரைன் நாட்டு எம்பியிடம் இருந்து அந்நாட்டு கொடியை பறிக்க முயன்ற ரஷ்ய பிரதிநிதியால் சர்வதேச மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது
கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 61 ஆவது சர்வதேச மாநாடு துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றது.
இதில் ரஷ்யா, உக்ரைன் மட்டுமின்றி அல்பேனியா, அர்மேனியா, அசர்பஜைன் உள்பட உறுப்பு நாடுகள் பங்கேற்றன.
சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட உக்ரைன் எம்பி ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கை தனது நாட்டு கொடியை கையில் வைத்திருந்தார். இதனை பார்த்த ரஷ்ய பிரதிநிதி உக்ரைன் எம்பி கையில் வைத்திருந்த தேசிய கொடியை பறித்துக் கொண்டு, அங்கிருந்து செல்ல முயன்றார்.
பின் ரஷ்ய பிரதிநிதியை துரத்திச் சென்ற உக்ரைன் எம்பி அவர் கையில் வைத்திருந்த உக்ரைன் கொடியை மீண்டும் பறித்துக் கொண்டார். மேலும் ரஷ்ய பிரதிநிதி செயலுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் எம்பி அவரது முகத்தில் கடுமையாக தாக்கினார்.
Discussion about this post