இலங்கைக்கு அருகில் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக மேற்கு உட்பட நான்கு மாகாணங்களில் இம்மாதம் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவைச் சூழவுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி இலங்கை ஊடாக காற்று கடக்கும் எனவும், இதன் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
Discussion about this post