இங்கிலாந்து மன்னர் சால்சின் முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹரி மட்டும் பங்கேற்பார் எனவும், மேகன் பங்கேற்கமாட்டார் எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
மன்னர் சால்சின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க அமெரிக்கா உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் முடிசூட்டு விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்கபோவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பதில் அவரது மனைவி ஜில்பைடன் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வார் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அதேவேளை இங்கிலாந்து இளவரசர் ஹரி-மேகன் தம்பதி அரச குடும்ப பதவிகளிலிருந்து விலகுவதாக கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவித்தனர்.
அதை தொடர்ந்து இருவரும் லண்டனில் இருந்து வெளியேறி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடிபெயர்ந்தனர்.
இந்நிலையில் கடந்தாண்டு செப்டெம்பர் மாதம் இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத் மறைந்த நிலையில், அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஹாரி-மேகன் தம்பதி மீண்டும் அரண்மனைக்கு வந்தனர்.
இதன் மூலம் பிரிந்த குடும்பம் ஒன்றாக சேரும் என எதிர்பார்த்த நிலையில் அது நடக்கவில்லை. இந்த நிலையில் ராணியின் மறைவுக்கு பின்னர் இங்கிலாந்து மன்னரான சால்ஸ் இம்மாதம் 6 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக முடிசூட்டப்படுகிறார்.
இந்த விழாவில் பங்கேற்க ஹாரி- மேகன் தம்பதிக்கு அழைப்பு விடுக்கப்படுமா என யூகங்கள் எழுந்து வந்த நிலையில்,இளவரசர் ஹரி மட்டும் பங்கேற்பார் எனவும், மேகன் பங்கேற்கமாட்டார் எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
Discussion about this post