வீதியில் விழுந்து கிடந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் இருந்த பையை, அதனை கண்டெடுத்த பாடசாலை சிறுமி
பணப்பையினை உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் அநுராதபுரம் மாவட்டத்தின் ராஜாங்கனையில் இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம் – சிறிமாபுர மகா
வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்விகற்கும் குறித்த சிறுமி, அருகிலுள்ள தனது நண்பியின் வீட்டில் விளையாடிவிட்டு
வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது வீதியோராமாக கிடந்த கைப்பை ஒன்றை கண்டெடுத்துள்ளார்.
அதனை வெற்று கைபை என நினைத்த எடுத்த அந்த சிறுமிக்கு, அந்த பணப்பை சற்று கடினமாக இருப்பதால் அதை
திறந்து பார்த்தபோது, அதில் நிறைய பணம் இருந்துள்ளது. இதையடுத்து அந்த சிறுமி, குறித்த கைப் பையை
உரிமையாளருக்கு ஒப்படைப்பதற்கு உதவுமாறு தனது தோழியின் தாயாருக்கு கூறியுள்ளார்.
அதன்பின்னர் பணம் தொலைத்தவரின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொண்டதன் பின்னர், அப்பகுதி
பிரதேசசபை அதிகாரிகள் முன்னிலையில் கைபை உரிமையாளரான பெண்னிடம் கையளிக்கப்பட்டது. அவசர
பணத்தேவைக்காக பணத்தை கைபையில் வைத்திருந்தபோதே தனது கைபை தவறவிடப்பட்டதாக அதனை
தவறவிட்ட பெண் தெரிவித்திருந்தார்.
இந்ந்லையில் பாடசாலை சிறுமியின் நேர்மையான செயலைப் பாராட்டி, அப்பகுதியிலுள்ள நலன்புரிச் சங்கமொன்று
சிறுமியை கெளரவித்திருந்ததாகவும் கூறப்படுவதுடன், பணத்தை தொலைத்தவரிடம் அதனை மீள ஒப்படத்த சிறுமிக்கு
பலரும் பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.
Discussion about this post