பெரு நாட்டில் நடைபெற்ற அகழாய்வின் போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முடி மற்றும் தோலின் சில பகுதிகள் அப்படியே இருப்பது அகழ்வாராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தலைநகர் லிமாவின் அருகே காஜாமார்குல்லாவில் நடைபெற்று வரும் அகழ்வராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட இந்த மம்மி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இளைஞனின் உடல் என தெரியவந்துள்ளது.
அந்த இளைஞரின் முடி மற்றும் தோலின் சில பகுதிகள் அப்படியே இருப்பது வியப்பளிப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8 குழந்தைகள் மற்றும் 12 பெரியவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. அவர்கள் ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முந்தைய இச்மா நாகரீகத்தின் சடங்குகளில் உயிர்தியாகம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post