டோக் குரங்குகளை ஏற்றுமதி செய்யும்போது விலங்குகள் சட்டங்கள் கடைபிடிக்கப்பட வேண்டும் என முன்னாள் வனஜீவராசிகள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா இன்று தெரிவித்துள்ளார்.
“விலங்குகள் தொடர்பான உரிமைகள் பொருத்தமான சட்டங்களால் அமைக்கப்பட்டுள்ளன, இந்த உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று பீல்ட் மார்ஷல் பொன்சேகா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
“விலங்குகளை உணவுக்காக ஏற்றுமதி செய்யக்கூடாது,” என்று அவர் கூறினார். சீனாவில் உள்ள எந்தவொரு தனியார் நிறுவனமும் இலங்கையில் இருந்து குரங்குகளை வாங்க விரும்பியதா என்பதை சீனத் தூதுவர் கண்டறிய வேண்டும் என்றார்.
அதேநேரம் குரங்குகள் போன்ற விலங்குகளும் மயில் போன்ற பறவைகளும் பயிர்களை நாசம் செய்வதாக அவர் குறிப்பிட்டார். “தற்போதைய வனவிலங்குகளுக்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் நான் ஏற்கனவே இது குறித்து பேசியுள்ளேன்” என்று அவர் கூறினார்.
Discussion about this post