பூமி தொடர்ந்தும் வெப்பமடைந்து வருவதாக உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. நிலத்திலும், கடலிலும் மனிதர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
உலகில் உள்ள அனைத்து கண்டங்களும் வறட்சி, வெள்ளம், வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பனியோடைகள் உருகுதல், கடல் வெப்பம் அடைதல் மற்றும் கடலின் நீர்மட்டம் என்பவை அதிகரித்துள்ளது. குறித்த விளைவுகளால் இயற்கை மட்டுமல்லாது, மனிதர்களும் வெகுவாக பாதிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, இந்த பூகோள மாற்றம் காரணமாக ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடருமாயின் விளைவுகள் இன்னும் அதிகமாகலாம் எனக் கூறப்படுகின்றது.
Discussion about this post