பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிரந்தர வதிவிடத்துடன், பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் தேசிய அடையாள அட்டை பெறாத 40 வயதுக்கு மேற்பட்ட இலங்கை பிரஜைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை பிரதேச செயலக அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பெற்றுக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Discussion about this post