நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகள் என்ற அடையாத்தோடு தென்னிந்திய சினிமாவில் கலக்கிய ஒரு நடிகை தான் ராதிகா. நாயகியாக அறிமுகமாகி இப்போது சினிமாவில் ஒரு தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார்.
சின்னத்திரையில் ராடான் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நிறைய சீரியல்களை தயாரிக்கிறார்.
அண்மையில் கூட கிழக்கு வாசல் என்ற தொடரின் பூஜையில் கலந்துகொண்டார். இதுவரை சன் தொலைக்காட்சியில் தொடர்கள் தயாரித்து வந்த ராதிகா இப்போது விஜய் டிவி பக்கமும் வந்துள்ளார்.
எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் ராதிகா ஒரு எமோஷ்னல் பதிவை போட்டுள்ளார். அவர் தனது மகனை வெளிநாட்டில் விட்டுவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார்.
அப்போது தனது மகனை பிரிய மனம் இல்லாமல் அவரை கட்டியணைத்து அழுத்துள்ளார். அவருடன் வெளிநாட்டில் இருந்த போது எடுக்க வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.
Discussion about this post