அனைத்து அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் என்று ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர்களை இணைத்துக் கொள்ளுதல் தொடர்பிலான புதிய சுற்றறிக்கை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்படவுள்ளது.
இதனால் இடைநிலை வகுப்புகளுக்கான அனுமதிக் கடிதங்கள் அமைச்சினால் வழங்கப்படாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, இன்று (17) அரச பாடசாலைகளுககு விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென தகவலொன்று பகிரப்பட்டது.
இது வெறும் வதந்தி என கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த்குமார் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post