ஓய்வூதிய வயதை உயர்த்துவது குறித்த மசோதாவை பற்றி இன்று நாடாளுமன்றத்தில் அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரேன் இறுதி முடிவு அறிவிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரான்ஸில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 62லிருந்து 64 ஆக உயர்த்துவதற்கு அரசாங்கம் முடிவெடுத்ததை தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி நாடு முழுவதும் நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த இப்போராட்டம் சில நாட்களாக காவல்துறையின் அடக்குமுறையால் பூகம்பமாக வெடித்ததுள்ளது. இந்த நிலையில் ஓய்வூதிய வயதை உயர்த்துவது குறித்த மசோதாவை பற்றி இன்று நாடாளுமன்றத்தில் அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரேன்(Emmanuel Macron) இறுதி முடிவு அறிவிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாடு தொடர்ந்து முன்னேற வேண்டும், உழைக்க வேண்டும், நமக்குக் காத்திருக்கும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று நெதர்லாந்திற்கு அரசு முறை விஜயம் செய்த ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.
ஆனால் பெரும்பான்மை இல்லாததால் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் ஓய்வூதிய மசோதா மீது பல மாதங்களாக நீடித்த விவாதங்கள் மற்றும் எதிர்ப்புகள், கவுன்சிலின் ஒப்புதலைப் பெற்றாலும், ஓய்வூதிய சட்டத்தை அமல்படுத்துவது சரியாக இருக்காது என தொழிற்சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் எச்சரிக்கின்றன.
தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் சட்டத்தை வெளியிட வேண்டாம் என்று மக்ரோனுக்கு அழுத்தம் கொடுப்பதாக போராட்டக்காரர்கள் விமர்சிக்கிறார்கள்.இந்த நிலையில் கவுன்சிலின் முடிவு இன்று அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் அரசியலமைப்பு வல்லுநர்கள் ஓய்வூதிய சட்ட மசோதாவை அமல்படுத்துவது சாத்தியமற்றதாக கருதுவதாக கூறியுள்ளனர்.
Discussion about this post