மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸில் கடமையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரிக்கு , அவரது தகாத காணொளிகளை அனுப்பி அச்சுறுத்திய கஹவத்தை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் சார்ஜன்ட் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்லான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் ஆரம்பித்துள்ளது. பெண் சார்ஜன்ட் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சார்ஜன்டுடன் தனக்கு சில காலமாக தகாத தொடர்பு இருந்ததாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திடம் பெண் சார்ஜன்ட் தெரிவித்துள்ளார்.
அந்த சார்ஜென்ட் காத்தான்குடியில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளனர். எனினும் சார்ஜன்ட் இடமாற்றம் பெற்று கஹவத்தைக்குச் சென்றதன் பின்னர் இருவருக்கும் இடையிலான உறவு முறிந்துவிட்டதாக அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க வீடியோக்களை தனக்கும், மேலும் பலருக்கும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாக பெண் சார்ஜென்ட் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சார்ஜென்ட் வட்ஸ்அப்பிற்கு அனுப்பிய வீடியோவின் சிடியையும் கொடுத்துள்ளார். ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் இருவரும் ஒன்றாக இருந்த போது சார்ஜன்ட் தனது கையடக்க தொலைபேசியில் இரகசியமாக வீடியோ பதிவு செய்துள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பெண் சார்ஜன்டிடம் இருந்து 300,000 ரூபா கடனாகப் பெற்றுள்ளார். கடன் தொகையை கேட்கக் கூடாது என மிரட்டியதாகவும், அவ்வாறு கேட்டால் இந்த வீடியோக்கள் முகநூலில் வெளியிடப்போவதாக பெண்ணை மிரட்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Discussion about this post