“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஊடக அடக்குமுறைக்காக ஒலிபரப்பு அதிகார சட்டமொன்றையும் அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கிறது. இதன் மூலம், சுதந்திர ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.” இவ்வாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்,
“இது தகவல் அறியும் உரிமை மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கையாகும்.
இதன் ஊடாக அரசாங்கத்திற்குக் கீழ்படிந்து இணங்கும் பொம்மை ஊடகக் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சர்வாதிகார ஒலிபரப்பு அதிகார சபை சட்டத்தை கொண்டுவந்து நாட்டின் ஊடகங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை உடனடியாக நிறுத்துவதற்கு முன்னின்று செயல்படுவேன்.” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post