Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

இன்றைய ராசி பலன்கள் 10-04-2023

April 10, 2023
in ஆன்மீகமும் ஜோதிடமும், முக்கியச் செய்திகள்
இன்றைய ராசி பலன்கள் 06-04-2023
0
SHARES
Share on FacebookShare on Twitter

10.04.2023 திங்கள் கிழமை சுபகிருது வருடம் பங்குனி மாதம் – 27ம் நாள்
நல்ல நேரம் காலை:6.30 – 7.30; மாலை:4.30 – 5.30
எமகண்டம் காலை: 10.30 – 12.00
இராகு காலம் காலை: 7.30 – 9.30
குளிகை: மதியம்: 1.30 – 3.00

பொது: தேய்பிறை. சதுர்த்தி திதி காலை 8.37 மணி வரை; பிறகு பஞ்சமி. அனுஷம் நட்சத்திரம் பகல் 1.39 மணி வரை; பிறகு கேட்டை. யோகம்: சித்த யோகம்.

மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழையசரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் பிரச்சினைகள் வந்து நீங்கும். உங்களின் முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர்கள், உறவினர்கள் வகையில் நன்மை உண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்‌. திடீர் யோகம் கிட்டும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.  ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உங்களின் கனவு நனவாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பால்யகால நண்பர்கள் உதவுவார்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

கன்னி

கன்னி: தன்னிச்சையாக சில முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழையவேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள்‌. வெற்றிக்கு வித்திடும் நாள்.

துலாம்

துலாம்: கணவன் – மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விசேஷங்களை முன்னின்றுநடத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள்.புது நட்பு உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்களால் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.

தனுசு

தனுசு: கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அனாவசிய செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் முக்கிய பணிகளை போராடி முடிப்பீர்கள். நிதானம் தேவைப்படும் நாள்.

மகரம்

மகரம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள்.  பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

கும்பம்

கும்பம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில்  மேலதிகாரிகளிடம் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.

மீனம்

மீனம்: இதுவரை இருந்த அசதி சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பி மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களின் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உதவுவார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

Tags: #Astrology#Horoscope#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsஇராசிபலன்
Previous Post

பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா!

Next Post

பிரான்ஸில் நள்ளிரவில் சரிந்து விழுந்த கட்டடம்!!

Next Post
பிரான்ஸில் நள்ளிரவில் சரிந்து விழுந்த கட்டடம்!!

பிரான்ஸில் நள்ளிரவில் சரிந்து விழுந்த கட்டடம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.