முட்டையின் விலை 35 ரூபாவாக குறைந்தால் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் நாட்டை வந்தடைந்துள்ளதால், ஒரு வாரத்திற்குள் முட்டை சந்தையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் என நம்புவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் விலை குறைப்பு காரணமாக பேக்கரி தொழில் ஒருபோதும் விலையை குறைக்கவில்லை என்ற கூற்றுக்கள் உள்ளன.
எரிபொருள் விலை குறைப்பு பேக்கரி உற்பத்தியை பாதிக்காது. ஆனால் எரிபொருள் விலை குறைப்பிலிருந்து பேக்கரி உற்பத்திக்கான நன்மைகளை நாங்கள் வழங்குவோம் என இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post